Paristamil Navigation Paristamil advert login

நடிகர் ஃபஹத் ஃபாசிலுக்கு அரியவகை நோய் பாதிப்பு?

நடிகர் ஃபஹத் ஃபாசிலுக்கு அரியவகை நோய் பாதிப்பு?

29 வைகாசி 2024 புதன் 08:58 | பார்வைகள் : 1810


நடிகர் ஃபஹத் ஃபாசில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழிலும் வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் ஃபஹத் ஃபாசில். சமீபத்தில் மலையாளத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘ஆவேஷம்’ திரைப்படம் வரவேற்பைப் பெற்றது. வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் ’புஷ்பா2’ படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார் ஃபஹத்.

என்னதான் பான் இந்தியா படத்தில் நடித்திருந்தாலும் ‘புஷ்பா’ படம் தனது சினிமா கரியரில் பெரிதாக உதவவில்லை என்று வெளிப்படையாகப் பேசினார். சினிமா கரியரைப் போலவே தனது தனிப்பட்ட பிரச்சினை குறித்தும் பிறருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார் ஃபஹத் என்கின்றனர் நெட்டிசன்கள்.

நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தை அடுத்த கொத்தமங்கலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் ஃபஹத் ஃபாசில். அங்கு வந்திருந்த மருத்துவரிடம், ”ADHD எனப்படும் கவனம் குறைபாடு ஹைபராக்டிவிட்டி கோளாறு எளிதில் குணப்படுத்தக் கூடியதா?” என்று கேட்டிருந்தார்.

அதற்கு மருத்துவர், “சிறுவயதில் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்தலாம்” என்று பதிலளித்திருக்கிறார். உடனே, ஃபஹத் ஃபாசில், “அப்போது 41 வயதில் கண்டறிந்தால் குணப்படுத்துவது கடினமா? எளிதா?” என்று ஃபஹத் கேட்டிருக்கிறார். இதனை வைத்து அவர், தன்னைக் குறிப்பிட்டுதான் இப்படி கேள்வி எழுப்பி இருக்கிறார்

இதனால், ஃபஹத் ADHD எனப்படும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என ரசிகர்கள் சொல்லி வருகின்றனர். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்கள் அதிக மறதி மற்றும் பொருட்களை ஒழுங்காக வைத்திருக்க வேண்டும் என்ற கவனம் இல்லாமல் இருப்பார்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்