Paristamil Navigation Paristamil advert login

விஜயின் 'GOAT' படத்திற்கு சிக்கல்...

விஜயின் 'GOAT' படத்திற்கு சிக்கல்...

29 வைகாசி 2024 புதன் 09:05 | பார்வைகள் : 725


வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், லைலா, பிரபுதேவா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் 'GOAT'. படம் செப்டம்பர் 5 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடிகர் விஜய் தனக்கான போர்ஷனை முடித்து கொடுத்து விட்டாலும் மற்ற நடிகர்களுக்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கிறது.

அந்த வகையில், படத்தில் நடிகர் ஜெயராமுக்கான போர்ஷன் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் தற்போது படமாக்கி வருகிறார்கள். இரவு நேரத்தில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் உருவாக்கப்பட்டு வருகிறதாம். இந்தக் காட்சிகளுக்காக பட்டாசு வெடித்திருக்கிறார்கள். இப்படி அனுமதி பெறாமல் இரவு நேரத்தில் படக்குழுவினர் வெடி வெடித்திருப்பது அங்கிருந்த பொதுமக்களுக்கு இடையூறாக மாறியிருக்கிறது.

இதனால், படக்குழுவினர் மீது அங்கிருந்தவர்கள் புகார் தெரிவித்திருக்கிறார்கள்.இந்நிலையில் இது குறித்து படக்குழுவினரிடம் விளக்கம் கேட்டு அரசு தரப்பில் இருந்து நோட்டீஸ் பறந்திருக்கிறது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியுடன் நட்புறவை பேணி வருகிறார் விஜய். மேலும், தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் புதுச்சேரிக்காரர் என்பதால் இந்த பிரச்சினை சுமுகமாக முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்