Paristamil Navigation Paristamil advert login

உலகின் முதல் மர செயற்கைகோள்- விஞ்ஞானிகளின் படைப்பு

உலகின் முதல் மர செயற்கைகோள்- விஞ்ஞானிகளின் படைப்பு

30 வைகாசி 2024 வியாழன் 07:50 | பார்வைகள் : 5975


உலகின் முதல் மர செயற்கைக்கோளை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கியோட்டோ பல்கலைக்கழகம் மற்றும் சுமிட்டோமோ பாரெஸ்ட்ரி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த செயற்கைக்கோளை தயாரித்துள்ளனர்.

சோதனை முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளின் ஒவ்வொரு பக்கமும் 10 சென்டி மீட்டர் (4 அங்குலம்) அளவைக் கொண்டுள்ளது. லிக்னோசாட் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் வருகிற செப்டம்பர் மாதம் விண்ணில் ஏவப்படுகிறது.

லிக்னோசாட் செயற்கைக்கோள் மக்னோலியா மரத்தினால் செய்யப்பட்டதாகும்.

வெளிபுறத்தில் சூரிய மின் தகடுகள் பொருத்தப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. லிக்னோசாட் திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்தவாறு விண்வெளியை மேம்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தொவித்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்