Paristamil Navigation Paristamil advert login

நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ?

நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ?

28 சித்திரை 2024 ஞாயிறு 10:43 | பார்வைகள் : 6267


ஏற்கனவே விஜய்யை வைத்து பீஸ்ட் என்கிற படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமாரிடம் உங்களுக்கு விஜய்யின் கடைசி படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தால் அதில் வேறு எந்த நடிகர்களை எல்லாம் அழைத்து வருவீர்கள் என்று சமீபத்திய விருது வழங்கும் விழா ஒன்றில் கேட்கப்பட்டது.

அவருக்கு பதில் அளித்த நெல்சன், விஜய் 69 படத்தில் தெலுங்கில் இருந்து மகேஷ் பாபு, மலையாளத்திலிருந்து மம்முட்டி, ஹிந்தியில் இருந்து ஷாருக்கான் இவர்கள் மூவரையும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைப்பேன் என்று கூறியுள்ளார்.

ஜெயிலர் படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோரை ரஜினியின் நண்பர்களாக இணைத்தது போல இந்த படத்தில் விஜய்யின் நண்பர்களாக இவர்கள் மூவரையும் சித்தரிக்கும் விதமாகத்தான் நெல்சன் இந்த பதிலை கூறியுள்ளார். அது மட்டுமல்ல கதாநாயகியாக யாரை ஒப்பந்தம் செய்வீர்கள் என்பதற்கு உடனே நயன்தாரா என்று தனது முதல் பட கதாநாயகியின் பெயரைத் தான் அவர் குறிப்பிட்டார் என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்