கொழும்பில் இருந்து யாழ் சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

30 சித்திரை 2024 செவ்வாய் 15:43 | பார்வைகள் : 4987
கொழும்பில் இருந்து வந்த நபர் ஒருவர் இன்றையதினம் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள நண்பனின் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தோபர் சுரேந்திரன் வில்சன் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் நண்பர் வெளிநாட்டில் வசித்து வருகின்றார். வெளிநாட்டில் வசித்து வருபவரது வீடு காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ளது.
குறித்த வீட்டில் வேலை செய்வதற்காக உயிரிழந்த நபரும் அவரது நண்பரும் வருகை தந்திருந்தனர். இதன்போது குறித்த நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1