யாழில் அச்சுறுத்தும் மூளைக்காய்ச்சல்: 2வது நோயாளியும் உயிரிழப்பு
1 வைகாசி 2024 புதன் 05:29 | பார்வைகள் : 1492
ஜப்பானிய மூளைக்காய்ச்சல் அல்லது மூளைக் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் இரண்டாவது நோயாளியும் நேற்று (30) உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிகா என்ற ஐந்து வயது சிறுமியே உயிரிழந்துள்ளார்.
காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், பலமுறை சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை.
குறித்த சிறுமியின் பிரேத பரிசோதனையின் போது, மூளைக்காய்ச்சல் ஏற்பட்டமைக்கான காரணம் தெரியவந்துள்ளது.
கடந்த வாரம் காய்ச்சலினால் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்ததுடன் மூளைக் காய்ச்சலே மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், பல வருடங்களின் பின்னர் இம்முறை வட மாகாணத்தில் மூளைக் காய்ச்சல் நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.
மூளைக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து வடக்கில் சுகாதார அதிகாரிகள் கலந்துரையாடி வருகின்றனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டாவது நோயாளியும் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.