மளிகை பொருட்களின் கொள்வனவு - 0.4% சதவீதத்தால் அதிகரிப்பு!!
1 வைகாசி 2024 புதன் 17:19 | பார்வைகள் : 3500
பிரான்சில் மளிகைப் பொருட்களின் கொள்வனவு 0.4% சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம் காரணமாக பிரெஞ்சு குடும்பங்களிடம் வாங்கும் திறன் மிகவும் மோசமடைந்திருந்தது. கடந்த சில வருடங்களாக அங்காடிகளில் விற்பனையாகும் பொருட்களின் எண்ணிக்கை மிகவும் வீழ்ச்சியடைந்திருந்தது. இந்நிலையில், மீண்டும் படிப்படியாக இந்த கொள்வனவு திறன் அதிகரித்துள்ளதாகவும், கடந்த பெப்ரவரி மாதத்தோடு ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் 0.4% சதவீதத்தால் இந்த கொடுப்பனவுகள் அதிகரித்துள்ளதாக பிரபல ஆய்வு நிறுவனமான INSEE தெரிவித்துள்ளது.
உணவுக்குத் தேவையான பொருட்களுடன், ஆடைகள் கொள்வனவு செய்வதும் சிறிய அளவில் (+1.3%) அதிகரித்துள்ளதாகவும், எரிவாயு பயன்படுத்துவது, பெற்றோல் டீசல் கொள்வனவும் சிறிய அளவில் (+0.1%) அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.