Paristamil Navigation Paristamil advert login

எதிர்ப்பு பிரச்சாரம், விலையுயர்வு, எது வந்தாலும் 1886 வந்த நாங்களே ராஜாக்கள். Coca-Cola.

எதிர்ப்பு பிரச்சாரம், விலையுயர்வு, எது வந்தாலும் 1886 வந்த நாங்களே ராஜாக்கள். Coca-Cola.

1 வைகாசி 2024 புதன் 19:45 | பார்வைகள் : 4260


Coca-Cola நிறுவனம் தமது காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது அதில் தங்களின் விற்பனை 3% சத வீதத்தால் அதிகரித்து உள்ளது என்றும், Coca-Cola குளிர்பானங்களுடன் தங்களின் ஏனைய தயாரிப்புக்கான Sprite, Fanta மற்றும் Minute Maid போன்ற வற்றின் விற்பனை தாங்கள் எதிர்பார்த்த 6-7% சத வீத விற்பனையை விடவும் அதிகமாகி 7-8% சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் குறித்த காலாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில், உடல் பருமனை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டாலும், பத்தில், எட்டுக் குடும்பங்கள் தங்களின் தயாரிப்புக்களை தொடர்ந்தும் பருகி வருவதாகவும், இதனால் தங்களின் தயாரிப்புகள் 95% சதவீதம் பிரான்சிலேயே தயாரிக்கப்படுவதாகவும் Coca-Cola நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இதேவேளை Dunkirk, Marseille, Toulouse மற்றும் தலைநகர் Parisக்கு அருகே உள்ள தயாரிப்பு நிறுவனங்கள் மேலும், Hauts-de-Seine, Clamart போன்ற பழமையான பிரெஞ்சு  தொழிற்சாலைகள் 2025 இல் மூடப்பட உள்ளதாகவும், அதற்கு பதிலாக Grigny மற்றும் l’Essonne பகுதிகளில் தங்களின் தொழிற்சாலைகளை நவீன மயப்படுத்தி, உற்பத்திகளைஅதிகரிக்க உள்ளதாகவும் Coca-Cola நிறுவனத்தின் பிரஞ்சு கிளை, தொழிலாளர் தினமான இன்றைய தினம் அறிவித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்