சுவிஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
18 ஆவணி 2023 வெள்ளி 10:50 | பார்வைகள் : 4592
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மற்றும் Vaud மாகாணங்களுக்குத்தான் இந்த வார இறுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாகாண மருத்துவர்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வயது முதிர்ந்தவர்கள் மற்றும் வீடற்றவர்கள் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்பம் அதிகரிப்பால் மக்களுக்காக அருங்காட்சியகங்கள் மற்றும் நீச்சல் குளங்களுக்கு இலவச அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
எளிதில் பாதிப்புக்குள்ளாகும் அபாயத்திலிருப்பவர்கள் வீட்டுக்கே சென்று, அவர்கள் நலம் குறித்து அறிந்துகொள்ள மாகாண அதிகாரிகள் ஏற்பாடு செய்ய இருக்கிறார்கள்.
மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறும், நாளொன்றிற்கு ஒன்றரை லிற்றர் தண்ணீராவது குடிக்குமாறும், ஷவர் அல்லது நீச்சல் குளத்தில் குளியல் போட்டு உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.