ஆபிரிக்காவை உலுக்கிய 'லஸா' காய்ச்சல்! - இல் து பிரான்சுக்குள் கண்டுபிடிப்பு!
3 வைகாசி 2024 வெள்ளி 06:03 | பார்வைகள் : 4250
ஆபிரிக்காவை உலுக்கி வரும் 'லஸா' காய்ச்சல் தற்போது இல் து பிரான்ஸ் மாகாணத்துக்குள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் இருந்து நாட்டுக்குத்திரும்பிய இராணுவ வீரர் ஒருவருக்கு அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ’அவருக்கு காய்ச்சல் அடையாளம் காணப்பட்டுள்ள போதும், அது தீவிரமடையவில்லை!’ என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவருடன் பயணித்தவர்களில் யாருக்கேனும் காய்ச்சல் தொற்றியிருக்கலாம், அல்லது அவர்களிடம் இருந்து குறித்த இராணுவ வீரருக்கு காய்ச்சல் தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு, அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
பாதிக்கப்பட்டவரின் இரத்தம், சிறுநீர் போன்றவை ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
லஸா எனப்படும் இந்த காய்ச்சலானது, ஆபிரிக்க நாடுகளில் மிக தீவிரமாக பரவி வருகிறது. இரத்த வாந்தி போன்ற தீவிர உடல்பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.