Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கொத்து மற்றும் சிற்றுண்டிகளின் விலை குறைப்பு

இலங்கையில் கொத்து மற்றும் சிற்றுண்டிகளின் விலை குறைப்பு

3 வைகாசி 2024 வெள்ளி 12:17 | பார்வைகள் : 5791


எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி கொத்து, மற்றும் ரைஸ் விலை 20 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார்.

அத்துடன், ஏனைய சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எனினும், தேநீர் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்