Paristamil Navigation Paristamil advert login

வாழைப்பழ பான்கேக்

வாழைப்பழ பான்கேக்

4 வைகாசி 2024 சனி 09:20 | பார்வைகள் : 918


 குழந்தைகள் விரும்பி சாப்பிடும் விதமாக வீட்டிலேயே எளிய செய்முறையில் வாழைப்பழ பான்கேக் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

வாழைப்பழம் - 5

மைதா - 1 கப்

முட்டை - 2

பால் - 1/2 கப்

தேங்காய் பால் - 1/2 கப்

சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு மசித்து கொள்ளவும்.

பின்னர் ஒரு பௌலை எடுத்து அதில் முட்டைகளை உடைத்து ஊற்றி நுரை வரும் வரை நன்றாக அடித்துக்கொள்ளவும்.

அடுத்து மற்றொரு பௌலில் மைதா, பேக்கிங் பவுடர் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.

பின்னர் அதில் குழி பறித்து அடித்து வைத்துள்ள முட்டை கலவை, எண்ணெய், பால் மற்றும் தேங்காய் பால் சேர்க்கவும்.

அடுத்து அதில் மசித்த வாழைப்பழங்களை சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலந்துகொள்ளுங்கள்

தற்போது அடுப்பில் தோசை தவா ஒன்றை வைத்து சூடாக்கவும்.

தவா சூடானதும் மாவை அதிகளவு எடுத்து தடிமனான அப்பம் போல் ஊற்றி சமமாக பரப்பவும்.

பின்னர் பான்கேக்கை சுற்றி எண்ணெய் தடவி வேகவிடவும்

இருபுறமும் நன்கு பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து ஜாம், ஐஸ் கிரீம் & நட்ஸ், சாக்லேட் சிரப் அல்லது தேன் போன்ற உங்களுக்கு விருப்பமான டாப்பிங்ஸுடன் சேர்த்து குழந்தைகளுக்கு பரிமாறவும்

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்