பிரான்சில் 'contrôle technique' தொழில்நுட்ப ஆய்வு செய்யப்படாத வாகனங்களுக்கும் அபராதம் அதிகரிப்பு.

5 வைகாசி 2024 ஞாயிறு 07:07 | பார்வைகள் : 7570
பிரான்சில் புழக்கத்தில் உள்ள வாகனங்களில் புதிதாக 0 km வாங்கிய வாகனம் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரும், ஏனைய வாகனங்கள் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னரும் 'contrôle technique' தொழில்நுட்ப ஆய்வு செய்யப்பட வேண்டும் என்னும் சட்டம் நடைமுறையில் உள்ளது.
இந்த நிலையில் இன்று பிரான்சில் புழக்கத்தில் உள்ள வாகனங்களில் 8% முதல் 10% சதவீத வாகனங்கள் 'contrôle technique' தொழில்நுட்ப ஆய்வு செய்யப்படாமலே வீதிகளில் காணப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைக்கு முக்கிய காரணமாக 'contrôle technique' தொழில்நுட்ப ஆய்வு செய்வதற்கு அறவிடப்படும் அதிகபட்ச தொகையான 75€ யூரோக்கள் பணமே காரணம் என பல வாகன உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் 'contrôle technique' தொழில்நுட்ப ஆய்வு சரியான காலப் பகுதியில் செய்யப்படாமல் காவல்துறையினரால் பரிசோதிக்கப்பட்டால், இன்றைய நிலையில் அபராதமாக 135€ யூரோவில் 235€ யூரோக்களாக அதிகரிக்கப்பட்ட தொகையை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.