மலையேறச் சென்றவர்கள் பனியில் சிக்கிப் பலி!!
5 வைகாசி 2024 ஞாயிறு 07:35 | பார்வைகள் : 1992
கோர்ஸ் தீவின் GR20 எனப்படும் மலை நடைபாதையில் ஏறச் சென்ற இருவர் கடும் பனிச்சரிவில் சிக்கி உள்ளனர்.
இந்தப் பகுதியில் பனிச்சரிவு மற்றும் மோசமான காலநிலை உள்ளதால் இதனைப் பயன்படுத்த வேண்டாம் எனத் தொடர்ந்து ஜோந்தார்மினர் எச்சரித்துள்ளனர்.
இதனை மீறி மலை ஏறிய இருவர் கடந்த 2ம் திகதியில் இருந்து காணாமற் போயுள்ளனர். இவர்கள் கடல் மட்டத்திலிருந்து 2.050 மீற்றர் உயரத்திலேயே சிக்கியிருந்தனர்.
கடுமை மழை மற்றும் மிகவும் மோசமான காலநிலைக்கிடையில் 3ம் திகதிக்கும் 4ம் திகதிக்கும் இடையில் ஜோந்தார்மினரின் மலை மீட்புப்படையினர் மிகவும் கடினமான மீட்புப் பணியினை நடாத்தி உள்ளனர்.
இதில் சிக்கிய 50 வயதுடைய ஒருவர் சாவடைந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளார். அவரது துணைவியார் மிகவும் மோசமான நிலையில் மீட்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காலநிலை அறிவுறுத்தல்களை மீறிச் சென்று உயிரப்பலி ஏற்பட்டுள்ளது.