யாழில் சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் விற்றவருக்கு அபராதம்

5 வைகாசி 2024 ஞாயிறு 10:16 | பார்வைகள் : 3800
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்தவரிடம் ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை பொது சுகாதார பரிசோதகர்கள் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அதன்போது முறையான விதத்தில் இறக்குமதி செய்யப்படாத மற்றும் நிறக்குறியீடற்ற வெளிநாட்டு சொக்லேட் வகைகள் , பிஸ்கட்டுகள் மற்றும் இனிப்பு பண்டங்கள் என்பவற்றை கைப்பற்றினர்.
அதனையடுத்து உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன், வழக்கு விசாரணைகளில் உரிமையாளர் குற்றங்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவரை கடுமையாக எச்சரித்த மன்று அவருக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டம் அறவிட்டது.