பிரான்சில் இயங்கும் 'Nobel Santé +' பல் மருத்துவ நிலையங்கள் மோசடியானவை. assurance maladie.
6 வைகாசி 2024 திங்கள் 14:55 | பார்வைகள் : 3054
பிரான்சில் இயங்கும் தனியார் பல் மருத்துவ நெட்வொர்க் அமைப்பான Nobel Santé + பல் மருத்துவ நிலையங்களில் பத்து நிலையங்கள முறை கேடான முறையிலும் பண மோசடியிலும் ஈடுபட்டதன் காரணமாக மூடப்பட்டது என (L'Assurance maladie) அரச மருத்துவ காப்புறிதி மையம் தெரிவித்துள்ளது.
தேவையற்ற முறையில் நேயாளிகளின் பல்லுக்கு 'couronnes' கிரீடம் வைத்தல், பிடுங்கி கட்டுதல், தேவைக்கு அதிகமாக மீண்டும் மீண்டும் நோயாளர்களை வரவைத்து "சுகப் படுத்துகிறோம்" என்ற பெயரில் பணம் அறவிடல் போன்ற நிதி மோசடியில் குறித்த நிறுவனம் ஈடுபட்டதாக L'Assurance maladie) அரச மருத்துவ காப்புறிதி மையம் தெரிவித்துள்ளது.
இதனாலேயே பிரான்சில் உள்ள
Île-de-France, Provence-Alpes-Côte d’Azur, Auvergne-Rhône-Alpes மற்றும் Nouvelle Aquitaine போன்ற நகரங்களில் இயங்கிவந்த பத்து பல் மருத்துவ நிலையங்கள் மூடப்பட்டன எனவும் ஏனைய நிலையங்கள் தீவிர கண்காணிப்பின் கீழ் உள்ளதாகவும் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் நோயாளிகள் குறித்த பல் மருத்துவ நிலையங்களில் மிக அவதானமாக இருக்கும்படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை Nobel Santé + பல் மருத்துவ நிலையங்களில் 2 900 000€ யூரோக்கள் நிதி மோசடி நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது அரச மருத்துவ காப்புறுதியிடம் இருந்தும் பொதுமக்களிடம் இருந்தும் செய்யப்பட்ட மோசடி எனவும் கூறப்பட்டுள்ளது.