ஜொந்தாம் வீரர் தற்கொலை! - இவ்வருடத்தின் மூன்றாவது நிகழ்வு..

7 வைகாசி 2024 செவ்வாய் 13:09 | பார்வைகள் : 12724
ஜொந்தாம் வீரர் ஒருவர் இன்று மே 7, செவ்வாய்க்கிழமை காலை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பா-து-கலேயின் (Pas-de-Calais) Arras நகரில் பணிபுரிந்து வந்த 44 வயதுடைய ஜொந்தாம் வீரர் ஒருவரே இன்று காலை 8 மணி அளவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது சேவைத் துப்பாக்கியை பயன்படுத்தி, தலையில் சுட்டுக்கொண்டு உயிரை மாய்த்துள்ளார்.
இரு பிள்ளைகளின் தந்தையான அவர், Avenue de l'Hippodrome வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவ்வருடத்தில் இடம்பெறும் மூன்றாவது ஜொந்தாமினரின் தற்கொலை இதுவாகும். இச்சம்பவம் தேசிய ஜொந்தாமினரிடம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1