பெற்றோர்கள் பிரிந்தால் - பிள்ளைகளை இருவரும் கவனித்துக்கொள்ள வேண்டும்! - புதிய விவாதத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி!
7 வைகாசி 2024 செவ்வாய் 20:00 | பார்வைகள் : 6208
பெற்றோர்கள் பிரிந்தால், பிள்ளைகளை கவனிக்கும் பொறுப்பு இருவரையும் சாரும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
‘குழந்தையை பார்வையிடுவதற்கான உரிமை’ தந்தைக்கு வழங்குவதற்கு பதிலாக, அதனை ஒரு கடமையாக கொண்டுவரவேண்டும் எனவும் மக்ரோன் தெரிவித்தார். பிரான்சில் 1.7 மில்லியன் குழந்தைகள் ’ஒற்றை பெற்றோர்’ கொண்ட பிள்ளைகளாக வளர்கின்றனர். அவர்களில் 85% சதவீதமானோர் தாயிடம் வளர்கின்றனர்.
ஆனால், குழந்தை 18 வயது நிரம்பும் வரை பிள்ளைகளை பார்வையிடச் செல்வது இரு பெற்றோர்களதும் கட்டாயமானதாகும். இது தொடர்பான விவாதம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி மக்ரோன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
குழந்தையின் கல்வியில், அவர்களது வளர்ச்சியில் இருவரும் பங்குதாரர்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். கணவன்/மனைவிக்கிடையே பிரிவு இலகுவில் கிடைத்துவிடுவதால், குழந்தைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்பட கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.