● திறக்கப்படுகிறது A13..!

8 வைகாசி 2024 புதன் 04:38 | பார்வைகள் : 9219
கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ள A13 நெடுஞ்சாலை, நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (மே-10) முதல் திறக்கப்படுகிறது.
Saint-Cloud பகுதியில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு காரணமாக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டிருந்தது. ஜூன் மாத இறுதி வரை வீதி மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 10 ஆம் திகதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நண்பகலின் பின்னர் வீதி வழமை போல் அனைத்து வாகனங்களுக்கும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
A14 நெடுஞ்சாலையை பயன்படுத்தி 'கார்பூலிங்) (Corpooling) முறை மூலம் மகிழுந்துகளை பிற பயணிகளுடன் பகிர்ந்துகொள்பவர்களுக்கு அரசு சுங்கரவரிக்கட்டணத்தில் பாதியை (€10. 60 இற்கு பதிலாக €5.40 யூரோக்கள்) அரசு செலுத்தும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1