Paristamil Navigation Paristamil advert login

AstraZeneca கொவிட் – 19 தடுப்பூசி மீளப்பெற தீர்மானம்

AstraZeneca கொவிட் – 19 தடுப்பூசி மீளப்பெற தீர்மானம்

8 வைகாசி 2024 புதன் 06:08 | பார்வைகள் : 2542


பிரித்தானியாவைத் தளமாகக்கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனிக்கா (AstraZeneca) தனது கொவிட் – 19 தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இருந்து மீளப்பெற தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஸ்ட்ராஜெனிக்காவின் கொவிட்-19 தடுப்பூசி, அரிதான மற்றும் ஆபத்தான பக்க விளைவை ஏற்படுத்தும் என நீதிமன்ற ஆவணங்களின் ஊடாக அண்மையில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், உலகம் முழுவதும் இருந்து தடுப்பூசிகளை மீளப்பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தடுப்பூசி இனி தயாரிக்கப்படவோ அல்லது விநியோகிக்கப்படவோ மாட்டாது என நிறுவனம் அறிவித்துள்ளாக கூறப்படுகின்றது.

அதேவேளை தடுப்பூசிகளை மீளப்பெறுவதற்கான விண்ணப்பம் மார்ச் ஐந்தாம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், மே ஏழாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்