பிரித்தானிய அருங்காட்சியகத்தின் தங்க கலைப்பொருட்கள் திருட்டு...
8 வைகாசி 2024 புதன் 12:02 | பார்வைகள் : 2669
பிரித்தானியாவின் Ely அருங்காட்சியகத்தில் வெண்கல காலத்தை சேர்ந்த விலைமதிப்பற்ற தங்க கலைப்பொருட்கள் திருடப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் Cambridgeshire உள்ள எலி அருங்காட்சியகத்தில்(Ely museum), 3000 ஆண்டுகள் பழமையான வெண்கல யுகத்தைச் சேர்ந்த விலைமதிப்பற்ற கலைப்பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்ற இந்த திருட்டு சம்பவத்தில், தங்கத்தால் ஆன அணிகலன்கள் இரண்டு - ஒரு தோள்வளை (Torc) மற்றும் ஒரு கைவளை காணாமல் போயுள்ளன.
அருங்காட்சியக கண்காணிப்பாளர் எலி ஹூக்ஸ், இந்த இழப்பு "அருங்காட்சியகத்திற்கும், பகுதியின் பாரம்பரியத்திற்கும் பேரிழப்பு" என்று விவரித்தார்.
2017 ஆம் ஆண்டு பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட நிதி உதவி மற்றும் நன்கொடைகளின் மூலம் பெறப்பட்ட அருங்காட்சியகத்தின் மிகவும் மதிப்புமிக்க பொக்கிஷமான இந்த தோள்வளை, £220,000 மதிப்புடையது.
இந்த கலைப்பொருட்களின் கலாச்சார முக்கியத்துவத்தை ஹூக்ஸ் வலியுறுத்தி, அவற்றை மீண்டும் பெற முடியாதவை என்று குறிப்பிட்டார்.
Cambridgeshire காவல்துறையுடன் அருங்காட்சியகம் இணைந்து பணியாற்றி வருகிறது.
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இவர்கள் மின்சார ஸ்கூட்டர்களில் தப்பிச் செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
கலைப்பொருட்களை மீட்பதே அருங்காட்சியகம் மற்றும் சட்ட அமலாக்கத்துறையின் முதன்மை பணி என தெரிவிக்கப்பட்டுள்ளது.