ஒலிம்பிக் கொடுப்பனவு! - மெற்றோ, RER ஊழியர்கள் €1,777 யூரோக்கள் வரை..!

9 வைகாசி 2024 வியாழன் 07:27 | பார்வைகள் : 15595
ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் காலத்தில் மெற்றோ மற்றும் RER தொடருந்து சாரதிகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு €1,777 யூரோக்கள் வரை கொடுப்பனவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கத்துக்கும், தொடருந்து நிறுவனமான RATP இற்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்த கொடுப்பனவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 22 ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் 8 ஆம் திகதி வரை ஒலிம்பிக் போட்டிகளின் போது 5,500 நிலையங்களைச் சேர்ந்த ஊழியர்கள் கடமையாற்ற நேரும். அவர்களுக்கு மட்டும் இந்த மேலதிக கொடுப்பனவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடருந்து துப்பரவு பணியார்கள், சாரதிகள், பாதுகாவலர்கால், கட்டுப்பாட்டாளர்கள், விற்பனை முகவர்கள் என பல்வேறு பிரிவினருக்கு இந்த கொடுப்பனவு வெவ்வேறு அளவுகளில் வழங்கப்பட உள்ளது.
மொத்தமாக €1,777 யூரோக்கள் வரை தனிநபர் இந்த கொடுப்பனை பெற முடியும்.
கிட்டத்தட்ட 30,000 ஊழியர்கள் இந்த கொடுப்பனவுகளை பெற உள்ளனர். நேற்று மே 8 ஆம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டபட்டுள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1