கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய நபர்

9 வைகாசி 2024 வியாழன் 15:01 | பார்வைகள் : 5237
ஐந்து மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான "குஷ்" என்ற போதை இலங்கைக்கு கொண்டு வந்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஹோமாகம பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய கிளப் நடனக் கலைஞரான இவர் தனது சூட்கேஸில் மறைத்து வைத்து இந்த "குஷ்" இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார்.
05 கிலோ 278 கிராம் எடையுடைய இந்த "குஷ்" கஞ்சா 36 தனித்தனியாக பொதி செய்யப்பட்ட பொதியில் அடைக்கப்பட்டிருந்தது.
தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து எயார் ஏசியா விமானம் FD-140 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
5 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025