Paristamil Navigation Paristamil advert login

குவைத் தீவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

குவைத் தீவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

13 ஆனி 2024 வியாழன் 08:15 | பார்வைகள் : 6007


குவைத்தில் இடம்பெற்ற தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளதாக தகவ்ல் வெளியாகியுள்ளது.

பெருமளவு வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடமொன்றிலேயே பெரும் அழிவை ஏற்படுத்திய தீ மூண்டுள்ளது என குவைத் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மங்காவ் நகரில் உள்ள ஆறுமாடிக்கட்டிடத்தின் சமையலறையில் தீ மூண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டிடத்தில் சிக்கிய பலர் மீட்கப்பட்டுள்ள நிலையில் துரதிஸ்டவசமாக பலர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்