Paristamil Navigation Paristamil advert login

Aulnay-sous-Bois : நடுவீதியில் துப்பாக்கிச்சூடு.. இளைஞன் பலி.!!

Aulnay-sous-Bois : நடுவீதியில் துப்பாக்கிச்சூடு.. இளைஞன் பலி.!!

14 ஆனி 2024 வெள்ளி 16:58 | பார்வைகள் : 2114


இன்று ஜூன் 14 ஆம் திகதி Aulnay-sous-Bois நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

Gros-Saule பகுதியில் நடந்து சென்ற 23 வயதுடைய இளைஞன் மீது திடீரென துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மார்பில் குண்டு பாய்ந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட இளைஞன், சில நிமிடங்களிலேயே உயிரிழந்துள்ளார். 

பிற்பகல் 3 மணிக்கு துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாகவும், ரைஃபிள் வகை துப்பாக்கியினால் அவர் சுடப்பட்டதாகவும், ஆயுததாரி(கள்) சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளதாகவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ள Seine-Saint-Denis மாவட்ட காவல்துறையினர் தெரிவித்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்