Paristamil Navigation Paristamil advert login

மோகன் பகவத், யோகி ஆதித்யநாத் இன்று ஆலோசனை

மோகன் பகவத், யோகி ஆதித்யநாத் இன்று ஆலோசனை

15 ஆனி 2024 சனி 02:53 | பார்வைகள் : 575


உபி. பா.ஜ., முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் இன்று முக்கிய ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி மீண்டும் பிரதமராக மோடி கடந்த 09-ம் தேதி பதவியேற்ற பின் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் முதன்முறையாக கடந்த 10-ம் தேதி பொது நிகழ்ச்சியில் பேசுகையில், மணிப்பூர் விவகாரத்தை கவனத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு யாருடையது? அரசு இந்த பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் என பேசினார்.

இந்நிலையில் உ.பி.யில் ஆர்.எஸ். எஸ்., பயிற்சி முகாமையொட்டி கோராக்பூரில் பா.ஜ., முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் உபி., யில் பா.ஜ., பெரும்பாலான தொகுதிகளில் பா.ஜ., தோல்வியடைந்தது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றியது.

இன்று நடக்கும் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வர்த்தக‌ விளம்பரங்கள்