பரிசில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்... காவல்துறையினர் குவிப்பு..!
15 ஆனி 2024 சனி 07:01 | பார்வைகள் : 4558
தலைநகர் பரிசில் இன்று ஜூன் 15 ஆம் திகதி மாலை பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
50,000 இல் இருந்து 100,000 வரையான ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகரில் எதிர்பார்க்கப்பட்டுள்ளனர். தீவிர வலதுசாரிக்கட்சியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், வன்முறைச் சம்பவங்கள் பதிவாகலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
21,000 காவல்துறையினர் 45 குழுக்களாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பரிஸ் தவிர்த்து, மார்செ, லியோன், ரென் போன்ற நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் எதிர்பார்க்கப்பட்டுள்ளன. மொத்தமாக 350,000 பேர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.