Paristamil Navigation Paristamil advert login

போரின் தீவிரம் - காசாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம்

போரின் தீவிரம் - காசாவில் பஞ்சம் ஏற்படும் அபாயம்

15 ஆனி 2024 சனி 07:55 | பார்வைகள் : 922


இஸ்ரேலானது காசாவின் மீது  தற்போது தீவிர தாக்குதல்களை தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் தெற்கு காசாவின் நிலைமை மோசமடைந்து வருகிறது என ஐநாவின் உலக உணவுத் திட்டத்தின் துணை இயக்குநர் கார்ல் ஸ்காவ்(Carl Skau) கவலை வெளியிட்டுள்ளார்.

பல மாதங்களாக வடக்கு காசாவில் இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையில், வளர்ந்து வரும் பொது சுகாதார நெருக்கடியால் பசி மற்றும் பஞ்சம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

"நாங்கள் ரஃபாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு முன்பே உணவுகளை சேமித்து வைத்திருந்தோம்.

அதனால் மக்களுக்கு அதனை வழங்கக்கூடியதாய் இருந்தது. ஆனால் தற்போது அதன் சேமிப்பானது குறைவடைந்து செல்கிறது.

எங்களுக்குத் தேவையான அணுகல் எங்களிடம் இல்லை. இது ஒரு இடப்பெயர்வு நெருக்கடி. உண்மையில் இஸ்ரேலின் தாக்குதலானது ஒரு பாதுகாப்பு பேரழிவைக் கொண்டுவருகிறது.

ரஃபாவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் இப்போது உண்மையில் கடற்கரையில் ஒரு சிறிய இடத்தில் நெரிசலில் உள்ளனர். இதனால் பசி பட்டினிக்கு மேலதிகமாக சுகாதார பிரச்சினைகளும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.” என்றார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்