Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவை பதற வைக்கும் உக்ரேனின் புதிய SAMbush தாக்குதல் 

ரஷ்யாவை பதற வைக்கும் உக்ரேனின் புதிய SAMbush தாக்குதல் 

15 ஆனி 2024 சனி 09:42 | பார்வைகள் : 1115


உக்ரைனுடன் அமெரிக்கா செய்துக்கொண்டுள்ள 10 வருட பாதுகாப்பு ஒப்பந்தம் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற உக்ரைன் - ரஷ்யா யுத்தத்தை நிச்சயமாக அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

'SAMbush' -போர் உலகிற்கு புதிதாக அறிமுகமாகியுள்ள இந்தச் சொல்லாடல், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேன் இராணுவம் உபபோகிக்கின்ற புதிய தந்திரோபாய நடவடிக்கையின் பெயர்.

'அம்புஷ்' (Ambush) என்ற சொற்பதம் உருமறைப்புச் செய்துகொண்டு பதுங்கி காத்திருந்து இலக்குகள் வருகின்போது அதிரடியாகத் தாக்குவதைக் குறிக்கின்ற செயல்.

SAMbush என்பது- பாதுங்கி காத்திருந்து இலக்குகள் வருகின்றபோது தரையில் இருந்து வானுக்கு ஏவப்படுகின்ற SAM -அதாவது Surface to Air Missiles ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் மேற்கொள்ளுவது.

வர்த்தக‌ விளம்பரங்கள்