Paristamil Navigation Paristamil advert login

சீனாவை இலக்கு வைக்கும்  அமெரிக்கா -  இரகசிய திட்டங்கள் அம்பலம்!

சீனாவை இலக்கு வைக்கும்  அமெரிக்கா -  இரகசிய திட்டங்கள் அம்பலம்!

15 ஆனி 2024 சனி 09:46 | பார்வைகள் : 1287


சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வரும் நாடான பிலிப்பைன்ஸில், அதன் ஆதிக்கத்தை குறைக்க கோவிட் தொற்று தொடர்பில் இரகசிய பிரச்சாரங்களை பெண்டகன் தலைமையிலான அமெரிக்க இராணுவம் முன்னெடுத்ததாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தி நிறுவனம் 2019 - 2021 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட கோவிட் காலப்பகுதி தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுகளில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

போலி டுவிட்டர்(X) கணக்குகளின் மூலம் இவ்வாறான இராணுவத்தின் பிரச்சார முயற்சிகள், தடுப்பூசி எதிர்ப்பு பிரச்சாரமாக உருமாறியது எனவும் கூறப்படுகிறது.

குறித்த சமூக ஊடக பதிவுகளில், சீனாவின் சோதனை கருவிகள் மற்றும் பிலிப்பைன்ஸிற்கு கிடைத்த முதல் தடுப்பூசியான சீனாவின் சினோவாக்(Sinovac) தடுப்பூசி ஆகியவற்றின் தரத்தை நிராகரிக்கும் முகமாக அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவால் வழங்கப்பட்ட தடுப்பூசிகள் மற்றும் பிற உயிர்காக்கும் உதவிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் பற்றிய சந்தேகத்தை விதைப்பதை நோக்கமாகக் கொண்டது என செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரையில் 300 போலி கணக்குகளை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், டுவிட்டரில் இது தொடர்பான நடவடிக்கையை நன்கு அறிந்த முன்னாள் அமெரிக்க இராணுவ அதிகாரிகளால் பகிரப்பட்ட விளக்கங்களுடன் பொருந்துகிறது என்றும் ஆதாரம் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க இராணுவத்தின் இந்த எதிர்ப்பு முயற்சி 2020 ஆம் ஆண்டு ஆரம்பானது என்றும், 2021 நடுப்பகுதியில் ஆசியாவிற்கு அப்பால் இது விரிவடைந்தது என்றும் கூறப்படுகிறது.

மேலும், கோவிட் வைரஸானது ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மக்களை பலியாக்கிய நேரத்தில் முஸ்லிம்கள் மத்தியில் சீனாவின் தடுப்பூசிகள் குறித்த அச்சத்தை பரப்புவதற்காக பல தளங்களில் போலி சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்தி, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள உள்ளூர் பார்வையாளர்களுக்கு பென்டகன் பிரச்சாரத்தை உருவாக்க ஆரம்பித்துள்ளது.

குறித்த பிரச்சாரங்களில் “தடுப்பூசிகளில் சில நேரங்களில் பன்றி இறைச்சி ஜெலட்டின் இருப்பதால், இஸ்லாமிய சட்டத்தின் கீழ் அவை தடைசெய்யப்பட்டதாகக் கருதப்படலாம்” என்ற சர்ச்சைக்குரிய வாதத்தை விரிவுபடுத்தியிருந்தது.


இந்நிலையில், சீனாவின் ஆதிக்கம் வளரும் நாடுகளில் தடுப்பூசியை இழிவுபடுத்தும் வகையில் அமெரிக்க இராணுவம் இரகசியப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக பெயர் குறிப்பிட முடியாத அந்நாட்டு பாதுகாப்புத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டார், என செய்தியில் அடிக்கோடிடப்பட்டுள்ளது.  
 

வர்த்தக‌ விளம்பரங்கள்