Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவின் தாய் இந்திரா : மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேட்டி

இந்தியாவின் தாய் இந்திரா : மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேட்டி

15 ஆனி 2024 சனி 14:54 | பார்வைகள் : 838


முன்னாள் பிரதமர் இந்திராவை இந்தியாவின் தாய் எனவும், கேரள முன்னாள் முதல்வர் கருணாகரனை தனது அரசியல் குரு எனவும் பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி கூறியுள்ளார்.

கேரள மாநிலம் புங்குன்னத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கருணாகரனின் நினைவுச்சின்னமான முரளி மந்திரத்தை சுரேஷ் கோபி பார்வையிட்டார்.

பிறகு அவர் கூறியதாவது: முன்னாள் பிரதமர் இந்திரா, இந்தியாவின் தாய். கருணாகரன், திறமையான நிர்வாகி. அவரும், கம்யூ., கட்சியை சேர்ந்த கேரள முன்னாள் முதல்வர் நாயனாரும் எனது அரசியல் குருக்கள்.

எனது வருகையை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம். எனது குருவுக்கு மரியாதை செலுத்தவே இங்கு வந்தேன். நாயனார் மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ள உறவை போல் கருணாகரனின் குடும்பத்தினருடனும் எனக்கு உறவு உள்ளது. கருணாகரன், கேரள காங்கிரசின் தந்தையாக இருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர், கருணாகரனின் மகன் முரளிதரன் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்