Paristamil Navigation Paristamil advert login

பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்க முடிவு!!

பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்க முடிவு!!

15 ஆனி 2024 சனி 14:58 | பார்வைகள் : 6384


எதிர்வரும் 30ம் திகதி நடக்க உள்ள பாராளுமன்றத் தேர்தலில் எதர்க்கட்சிகளிற்கு வாக்களிக்கப் போவதாகப் பெரும்பான்மையானவர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று நடாத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் 52 சதவீதமானவர்கள் ஆளும் மக்ரோன் கட்சிக்கு வாக்களிக்காமல் எதிர்க்கட்சிகளிற்கு வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆளும் கட்சியின் ஆட்சியில் பெரும் விலையேற்றங்களும், பெரும் இன்னல்களும், இருப்பதால் தாம் எதிர்க்கட்சிகளிற்கு வாக்களிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

23 சதவீதமாhனவர்கள் ஆளும் கட்சிக்கும் சரி, எதிர்க்கட்சிக்கும் சரி வாக்களிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர். புதிய கட்சிகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

வெறும் 18 சதவீதமானவர்கள் மட்டுமே ஆளும் மக்ரோன் கட்சிக்கு வாக்களிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், 7 சதவீதமானவர்கள் தேர்தலில் வாக்களிக்கவே போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்