Paristamil Navigation Paristamil advert login

தீவிர வலதுசாரிகளிற்கு எதிரான போராட்டம் !!

தீவிர வலதுசாரிகளிற்கு எதிரான போராட்டம் !!

15 ஆனி 2024 சனி 16:29 | பார்வைகள் : 2473


பாராளுமன்றத் தேர்தலிற்கு இன்னமும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், இன்று பிரான்சில் பெரும் போராட்டங்கள்; நடந்துள்ளன. தீவிர வலதுசாரிகளிற்கு எதிராக இந்தப் போராட்டங்கள் நடந்துள்ளன.

பிரான்ஸ் முழுவதும் நடந்து போராட்டங்களில் 217.000 பேர் கலந்து கொண்டிருப்பதாகக் காவற்துறையினர் தெரிவித்த நிலையில், இதனை மறுதலித்து 640.000 பேர் கலந்து கொண்டுள்ளதாக இந்தப் பேரணியை ஒழுங்கு செய்த தொழிற்சங்கமான CGT தெரிவித்துள்ளது.

காவற்துறையினர் பொதுவாகவே மிகவும் குறைந்த தொகையினைத் தெரிவிப்பது வழமை.

பரிசில் மட்டும் 75.000 பேர் கலந்து கொண்டிருப்பதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ள நிலையில், இதனை மறுதலித்து 250.000 பேர் கலந்து கொண்டுள்ளதாக CGT தெரிவித்துள்ளது.

இன்று இந்தப் பேரணிகளில் அசம்பாவிதங்கள் நடந்துவிடாது இருக்க 21.000 காவற்துறையினரும் ஜோந்தார்மினரும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

அமைதியாக நடந்த இந்தப் பேரணியில், நால்வர் மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்