Paristamil Navigation Paristamil advert login

பரிசில் 75,000 பேர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம்..!

பரிசில் 75,000 பேர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம்..!

15 ஆனி 2024 சனி 17:17 | பார்வைகள் : 2632


இன்று ஜூன் 15 ஆம் திகதி பரிசில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 75,000 பேர் பங்கேற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

தீவிர வலதுசாரியினர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். தொழிற்சங்கத்தினர் தெரிவித்த தகவலின் படி 250,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

நாடு முழுவதும் 145 ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. Marseille நகரில் 12,000 பேரும், Nantes நகரில் 8,500 பேரும், Rennes நகரில் 8,000 பேரும் Grenoble நகரில் 6,900 பேரும், Toulouse நகரில் 5,000 பேரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். 

CGT தொழிற்சங்கம் தெரிவித்த தகவலின் படி நாடு முழுவதும் 600,000 பேர் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்