Paristamil Navigation Paristamil advert login

எதையும் நிர்வாகிக்கும் திறமை Jordan Bardellaமிடம் இல்லை... முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷி!

எதையும் நிர்வாகிக்கும் திறமை Jordan Bardellaமிடம் இல்லை... முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷி!

16 ஆனி 2024 ஞாயிறு 05:07 | பார்வைகள் : 2379


பொதுத்தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்க, பிரச்சாரங்களும் சூடு பிடித்துள்ளன. இந்த தேர்தலில் வலதுசாரி கட்சிகளின் பக்கம் ஆதரவுகள் பெருகி வருவதாக கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷி தெரிவித்த கருத்து ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிர வலதுசாரியான Rassemblement National கட்சியின் தலைவர் Jordan Bardella குறித்து சர்கோஷி தெரிவிக்கையில், “அவர் முன்னர் எப்போதும் எதையும் நிர்வாகிக்கும் நிலையில் இருந்ததில்லை. அவருக்கு அனுபவமும் இல்லை. 30 வயதினை நிரம்பாத ஒருவர் பிரான்சை வழிநடத்திச் செல்ல முடியுமா.. இறுக்கமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம். இதனை பிரெஞ்சு மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்” என அவர் தெரிவித்தார்.

வரும் ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆம் திகதிகளில் பிரான்சில் பொதுத்தேர்தல் இடம்பெற உள்ளது. பெரும்பான்மை வாக்குகளைப் பெற இடதுசாரி கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்