Paristamil Navigation Paristamil advert login

வன்முறை - காவல்துறையினர் மூவர் காயம் - துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி..!!

வன்முறை - காவல்துறையினர் மூவர் காயம் - துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி..!!

16 ஆனி 2024 ஞாயிறு 15:06 | பார்வைகள் : 2035


நேற்று சனிக்கிழமை இரவு Manche நகரில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் மூன்று காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். அதேவேளை, காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

பிரான்சின் வடமேற்கு நகரமான Cherbourg-en-Cotentin இல் நேற்று சனிக்கிழமை இரவு முழுவதும் பலத்த வன்முறை இடம்பெற்றது. வீதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டும், குப்பைத் தொட்டிகள் வீதிகளுக்கு இழுத்துவரப்பட்டு எரியூட்டப்பட்டதுமாக பலத்த வன்முறை பதிவானது.

மேலும் காவல்துறையினர் மீதும் தாக்குதல் இடம்பெற்றது. இதன்போது போன்று காவல்துறையினர் காயமடைந்தனர். 

பதில் தாக்குதல் மேற்கொண்டதில், 19 வயதுடைய இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளார்.

 

விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்