Paristamil Navigation Paristamil advert login

இளைஞர்களை திரட்டவேண்டிய பொறுப்பில் Kylian Mbappé இருக்கின்றார்.. பிரதமர் தெரிவிப்பு...!

இளைஞர்களை திரட்டவேண்டிய பொறுப்பில்  Kylian Mbappé  இருக்கின்றார்.. பிரதமர் தெரிவிப்பு...!

17 ஆனி 2024 திங்கள் 09:23 | பார்வைகள் : 5250


’இளைஞர்கள் அனைவரும் வாக்களிக்கவேண்டும்!’ என உதைபந்தாட்ட வீரர் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் கட்சிக்கு சார்பாக அவர் இந்த கருத்தினை வெளியிட்டிருந்தார். அவரது இந்த கருத்து இணைவெளியில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. சார்பு அரசியல் பேசுகிறார் என விமர்சிக்கப்பட்டது. அதன் ஒரு அங்கமாக
”விளையாட்டு வீரர்கள் நடுநிலை வகிக்க வேண்டும்!” என பிரெஞ்சு உதைபந்தாட்ட சம்மேளனம் (La Fédération française) தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், இன்று ஜூன் 17  ஆம் திகதி காலை ஊடக சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற பிரதமர் கேப்ரியல் அத்தால், ‘அந்த கதாப்பாத்திரத்தில் எம்பாபே இருக்கின்றார்’ என தெரிவித்தார்.

”Kylian Mbappé பின்னார் ஏராளமான இளைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் எம்பாபேயின் கருத்தை பின் தொடர்கிறார்கள். அவர்களை வாக்களிக்க அழைக்க வேண்டிய பொறுப்பில் எம்பாபே இருக்கின்றார். இளைஞர்கள் தான் நாட்டின் எரிபொருள். இயக்கசக்தி.” என தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்