Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானில் 12 வயது சிறுமி திருமணம் செய்த 72 வயதுடைய மூதாட்டி

பாகிஸ்தானில் 12 வயது சிறுமி திருமணம் செய்த 72 வயதுடைய மூதாட்டி

17 ஆனி 2024 திங்கள் 12:26 | பார்வைகள் : 1685


பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பெசாவரில்  பொலிஸார் 12 வயது சிறுமியை திருமணம் செய்ய முயன்ற 72 வயது முதியவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த திருமணம் நடப்பதற்குள் அதிகாரிகள் தலையிட்டு, 72 வயதானவரை கைது செய்துள்ள நிலையில் சிறுமியின் தந்தை சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாரணைகளின்போது சிறுமியின் தந்தை, தனது மகளை 72 வயது மணமகனுக்கு 500,000 பாகிஸ்தான் ரூபாய்க்கு விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது.

உலகிலேயே அதிகமாக சிறுவர்  திருமணங்களின் நடைபெறும் நாடுகளில் பாகிஸ்தானில் ஒன்றாகும்.

ஐக்கிய நாடுகள் சிறுவர் அமையத்தின் தகவல்படி, பாகிஸ்தானில் 18.9 மில்லியன் சிறுமிகள் 18 வயதை அடையும் முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

மேலும், 4.6 மில்லியன் சிறுமிகள் 16 வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்