றொரன்டோவில் புதிய வகை வைரஸ் தொற்று

27 ஆவணி 2023 ஞாயிறு 11:24 | பார்வைகள் : 13394
றொரன்டோவில் வெஸ்ட் நைல் எனப்படும் வைரஸ் தொற்று தாக்கிய இரண்டு பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.
றொரன்டோ பொது சுகாதார முகவர் அலுவலகம் இந்த விபரத்தை வெளியிட்டுள்ளது.
றொரன்டோவின் எந்தப் பகுதியில் இந்த நோய் தொற்றாளர்கள் பதிவானார்கள் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
வெஸ்ட் நைல் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான மனிதர்கள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நோய் தொற்று தாக்கம் தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு றொரன்டோ மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
காய்ச்சல், தலைவலி, தோல் ஒவ்வாமை, வாந்தி, வீக்கம் போன்ற பல்வேறு நோய் அறிகுறிகள் தென்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நுளம்பு ஒன்றின் மூலம் இந்த நோய் தொற்று பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1