"நான் பிரதமராக பதவியேற்றக்க மாட்டேன்" பின்வாங்கினாரா? தீவிர வலதுசாரி கட்சியின் தலைவர் Jordan BARDELLA.
18 ஆனி 2024 செவ்வாய் 09:45 | பார்வைகள் : 6313
நடந்து முடிந்த ஐரோப்பிய தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான Rassemblement national
கட்சி அதிக பெரும்பான்மை பெற்றதை அடுத்து பிரான்ஸ் அதிபர் Emmanuel Macron கடந்த ஜூன் மாதம் ஒன்பதாம் திகதி பிரான்ஸ் நாடாளுமன்றத்தை கலைத்ததும் புதிய நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் ஜூன் 30-ம் திகதி முதல் சுற்று ஆகவும், ஜூலை 7ஆம் தேதி இரண்டாவது,சுற்ராகவும் அறிவித்து இருப்பது நீங்கள் அறிந்ததே.
இந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியே அதிக பெரும்பான்மையை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இடதுசாரிகளின் கூட்டு கட்சியின் முயற்சி அந்த எதிர்பார்ப்பை சற்று குலைத்திருக்கிறது என அரசியல் அவதானிகள் தெரிவித்து இருக்கும் நிலையில்.
தீவிர வலதுசாரி கட்சியின் தலைவரும் அடுத்த நாடாளுமன்றத்தின் பிரதமராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட Jordan BARDELLA "நான் பிரதமராக ஆட்சி ஏற்கமாட்டேன்" என தெரிவித்திருக்கிறார்.
பிரான்சில் வெளியாகும் பிரதான பத்திரிகையான :Le Parisien' பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் Jordan Bardella "முதலில் இன்று நடைமுறையில் இருக்கும் ஓய்வூதிய சீர்திருத்தச் சட்டத்தை மாற்றுவோம் எனவும், எரிசக்தி மற்றும் எரிபொருளின் மீதான வரியை 20% இலிருந்து 5.5% குறைப்போம் எனவும், ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட்டில் பிரான்சின் பங்களிப்பை 2 பில்லியன் யூரோக்கள் குறைக்க வேண்டும் எனவும், குற்ற செயல்களில் ஈடுபடும் சிறார்களின் பெற்றோருக்கு குடும்ப கொடுப்பனவுகளை நிறுத்தி வைக்கும் தமது திட்டத்தை நடைமுறைப்படுத்துவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் "உங்கள் கட்சி ஆட்சியமைக்கும் நிலை வந்தால் நீங்கள் பிரதமராக வருவீர்களா?" எனும் கேள்விக்கு பதில் அளித்த Jordan Bardella " எமது Rassemblement national கட்சி தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்றால் மட்டுமே நான் பிரதமராக பதவியேற்பேன்" என தெரிவித்துள்ளார்.