Paristamil Navigation Paristamil advert login

உமாபதிக்கு ரூ.500 கோடி வரதட்சணையா?

உமாபதிக்கு ரூ.500 கோடி வரதட்சணையா?

18 ஆனி 2024 செவ்வாய் 11:29 | பார்வைகள் : 553


சமீபத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், காமெடி நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் திருமணம் நடந்தது என்பதும் இதனை அடுத்து சென்னையில் நடந்த வரவேற்பில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சமூக வலைதள பிரபலம் ஒருவர் நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வரதட்சணையாக கொடுத்துள்ளார் என்று அதிகாரபூர்வமற்ற தகவலை தெரிவித்துள்ளார்.

நடிகர் அர்ஜுனுக்கு 1000 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாகவும் அதில் 500 கோடி ரூபாய் சொத்துக்களை மகளுக்காக அவர் கொடுத்து விட்டதாகவும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என இருந்து வரும் நிலையில் அவருக்கு சொத்து மதிப்பு அதிகம் இருக்கலாம் என்பது உண்மைதான். ஆனாலும் 1000 கோடி ரூபாய் அளவுக்கு இருக்குமா? அதில் அவர் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனது மகளுக்கு சீதனமாக வழங்கி இருப்பாரா? என்பதெல்லாம் யூகத்தின் அடிப்படையில் கூறும் கருத்துக்களாகவே பார்க்கப்படுகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்