Paristamil Navigation Paristamil advert login

மன்னாரில் குடும்பத் தகராறு - குடும்பஸ்தரின் விபரீத முடிவு

மன்னாரில் குடும்பத் தகராறு - குடும்பஸ்தரின் விபரீத முடிவு

18 ஆனி 2024 செவ்வாய் 14:05 | பார்வைகள் : 10864


மன்னார், மடு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலம்பிட்டி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக குடும்பஸ்தர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் பாலம்பிட்டியை சேர்ந்த 61 வயதுடைய எல்லாளன் என அழைக்கப்படுகின்ற நான்கு பிள்ளைகளின் தந்தையான தர்மராசா மரியஜேசுதாசன் எனத் தெரியவருகிறது.

மேலும் குறித்த நபர் நேற்று பகல் 12.40 மணியளவில் தனது வயல் நிலத்திற்குச் சென்று நஞ்சருந்திய நிலையில் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டு முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

குடும்பத்திற்குள் ஒரு வாரத்திற்கு மேலாக கருத்து முரண்பாடு ஏற்பட்டு வந்த நிலையிலேயே குறித்த நபர் இவ்வாறு விபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார் என பொது மக்கள் கூறுகின்றனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்