Paristamil Navigation Paristamil advert login

■ கோர விபத்தில் ஏழு பேர் பலி..!

■ கோர விபத்தில் ஏழு பேர் பலி..!

18 ஆனி 2024 செவ்வாய் 19:37 | பார்வைகள் : 8572


இன்று ஜூன் 18, செவ்வாய்க்கிழமை மாலை Bailleau-le-Pin (Eure-et-Loir) நகரில் ஏற்பட்ட வீதி விபத்தில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மாலை 7 மணிக்கு இந்த விபத்து RD 921 சாலையில் இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக பயணித்த மூன்று மகிழுந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி பெரும் சேதம் ஏற்பட்டது. 90 வயதுடைய ஆண் ஒருவரும், 85 வயதுடைய பெண் ஒருவரும், 19 தொடக்கம் 20 வயதுடைய ஐந்து இளைஞர்களும் விபத்தில் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.  

பிரான்சின் வடமத்திய பகுதியான Eure-et-Loir மாவட்டத்தினை ஊடறுக்கும் குறித்த நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டது. அதை அடுத்து வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

 

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்