விஜய்யின் 'கோட்' படத்தின் கதை லீக்..!
19 ஆனி 2024 புதன் 10:58 | பார்வைகள் : 1276
தளபதி விஜய் நடித்த ‘கோட்’ படத்தின் கதை டைம் டிராவல் கதையம்சம் கொண்டது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் கதை சுருக்கம் வெளியாகி உள்ள நிலையில் முற்றிலும் வித்தியாசமாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் ‘கோட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கிய சில விநியோகஸ்தர்கள் கதை சுருக்கத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி இந்த படத்தின் கதை என்பது கடந்த 2004 ஆம் ஆண்டு ரஷ்யாவில் மாஸ்கோ நகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு குறித்த கதையம்சம் என்று தெரிகிறது. தற்கொலை படையை சேர்ந்த ஒருவர் உடம்பில் வெடிகுண்டை கட்டிக் கொண்டு மெட்ரோ ரயிலில் வெடிக்க செய்த போது இந்த தாக்குதலில் 41 பேர் உயிரிழந்தனர் என்றும் ஏராளமானோர் காயமடைந்தனர் என்றும் கூறப்பட்டது. இந்த தீவிரவாத தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பதை விஜய் கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதை என கசிந்துள்ளது முற்றிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்த நிலையில் இந்த கதை சுருக்கமும் அதை ஒட்டி வருவதால் இந்த கதை சுருக்கம் உண்மையாக இருக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இதில் விஜய்யின் தந்தை மகன் கேரக்டர்கள் மற்றும் மூன்றாவது விஜய் கேரகட்ர் எப்படி வருகிறது? கேப்டன் விஜயகாந்த் கேரக்டர் இந்த படத்தில் என்னவாக இருக்கும் என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.