Paristamil Navigation Paristamil advert login

யுவராஜ் சிங் வாழ்க்கை வரலாறு திரைப்பட தலைப்பு என்ன தெரியுமா?

யுவராஜ் சிங்  வாழ்க்கை  வரலாறு திரைப்பட தலைப்பு என்ன தெரியுமா?

19 ஆனி 2024 புதன் 11:00 | பார்வைகள் : 1837


கிரிக்கெட்டர் யுவராஜ் சிங் தனது பயோபிக் உருவாக இருப்பதை உறுதி செய்துள்ளார். இதோடு படத்தின் தலைப்பு குறித்தானத் தகவலும் வெளியாகி இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சினிமாவில் வெளியாகும் பயோபிக் படங்களுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக விளையாட்டு வீரர்களின் பயோபிக்கில் போராட்டம், வலி, அவமானம் அதன் பின்னான வெற்றி என பல உணர்வுகள் கொட்டிக் கிடக்கும். நிஜத்தில் தாங்கள் பார்த்து ரசித்த விளையாட்டு வீரர்களின் கதைகளை திரையில் ரசிகர்கள் கொண்டாடிய வரலாறும் இங்கு உண்டு.

கிரிக்கெட் ஜாம்பவான்களான எம்.எஸ். தோனி, கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர் என பல விளையாட்டு வீரர்களின் பயோபிக் வெளிவந்து வெற்றிப் பெற்றது. இந்த வரிசையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட்டர் யுவராஜ் சிங் தன்னுடைய பயோபிக் கதையை தானே எழுதி, இயக்கி, தயாரித்து நடிக்கவும் போவதாக எக்ஸ் பக்கத்தில் கூறியிருந்தார்.

இந்த விஷயத்தை அவரது தந்தை நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் யோகராஜ் சிங் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். ”எனது மகன் தயாரிக்கும் பயோபிக் படத்திற்கு 'தி மேன் ஆஃப் தி லாங்கஸ்ட் ஹவர்' என்று தலைப்பிட்டுள்ளோம். படத்தில் எனக்கும் யுவராஜூக்கும் இடையிலான உறவுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். தலைப்பிற்கு யுவராஜின் இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் வரலாற்றில் பல பெருமை மிகு தருணங்களுக்கு சொந்தக்காரர் யுவராஜ் சிங். டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் விளாசி சாதனைப் படைத்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியா இரண்டாவது முறையாக உலகக்கோப்பையை வென்றதற்கு, யுவராஜ் சிங்கின் பங்களிப்பு முக்கிய காரணம். இவரது தனிப்பட்ட வாழ்க்கையும் பல சோதனைகளைக் கொண்டது.

குறிப்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து போராடி மீண்டு வந்தார். முன்பு தன்னுடைய பயோபிக்கில் ரன்பீர் கபூர் நடித்தால் நன்றாக இருக்கும் என யுவராஜ் சிங் விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுபற்றி உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்