Paristamil Navigation Paristamil advert login

வீட்டில் பாதணிகளை அணிவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

வீட்டில் பாதணிகளை அணிவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

19 ஆனி 2024 புதன் 11:13 | பார்வைகள் : 2728


வீட்டில் வெறுங்காலுடன் நடப்பது சௌகரியமாகவும், எளிதாகவும் இருக்கும் அதே வேளையில், ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாயங்கள் மறைந்திருக்கின்றன என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. பலர், கூல் டைல்ஸ் அல்லது சூடான கார்பெட்களின் உணர்வை வெறும் காலில் அனுபவிக்கிறார்கள், ஆனால் இந்த பழக்கம் அதிக தீங்கு விளைவிக்கக் கூடியதாக உள்ளது.

காலில் காயங்கள் அதிகரிக்கும் ஆபத்து: வீட்டில் வெறுங்காலுடன் நடப்பது பாதிப்பில்லாதது போல தோன்றலாம், ஆனால் அது உண்மையில் பல்வேறு கால் காயங்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. நாம் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் நடக்கும்போது, ​​நம் கால்விரல்களை காயப்படுத்தவோ, கூர்மையான பொருட்களை மிதிக்கவோ அல்லது ஈரமான மேற்பரப்பில் நழுவி விழவோ வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த சிறிய விபத்துக்கள், நம் கால் விரல்களில் வெட்டுக்கள், காயங்கள் அல்லது எலும்பு முறிவுகள் போன்ற கடுமையான காயங்களுக்கு வழிவகுக்கும். பாதம் மற்றும் கணுக்கால் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வெறுங்காலுடன் நடப்பது காயங்களின் அபாயத்தை அதிகரிக்கிறது, குறிப்பாக வயதானவர்களுக்கு ஏற்படும் அபாயத்தை எடுத்துக்காட்டுகிறது.

நோய்க்கிருமிகள் மற்றும் ஒவ்வாமைகள் : பார்ப்பதற்கு வீடு சுத்தமாகத் தோன்றினாலும், நுண்ணுயிர் கிருமிகள் இருக்கத்தான் செய்கிறது. எனவே வெறுங்காலுடன் நடப்பதால், நமது பாதங்களில் பாக்டீரியா, பூஞ்சை போன்ற தொற்று நோய்களை ஏற்படும் அல்லது தோல் எரிச்சல்களுக்கு வழிவகுக்கும். மேலும், வெறுங்காலுடன் நடப்பதால், குளியலறையின் ஃபிலோர்களில் அடிக்கடி ஏற்படும் சூடான, ஈரமான சூழலில் வளர்ந்து வரும் பூஞ்சை தொற்று அபாயத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்க பாதவியல் மருத்துவ சங்கம் கூறியுள்ளது.

முதுகுவலிக்கு வழிவகுக்கும் : நமது முழு உடலையும் பாதுகாப்பதில் நமது பாதங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காலணிகளின் சரியான ஆதரவு இல்லை என்றால், நம் கால்களில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்தி, முதுகுவலிக்கு வழிவகுக்கும்.

நிரந்தர குதிகால் வெடிப்பு… வீட்டில் வெறுங்காலுடன் நடப்பதால் நிரந்தரமாக குதிகால் வெடிப்பு உருவாகும் சாத்தியமும் உள்ளது. நமது குதிகால் காலணிகளின் பாதுகாப்பு இல்லாதபோது, ​​அவை வறண்ட காற்று மற்றும் கடினமான பரப்புகளில் நடப்பதால் உராய்வுக்கு ஆளாகின்றன. இதனால் நமது குதிகாலின் தோல் வறண்டு, வெடிப்பு ஏற்பட்டு சில நேரங்களில் வலிக்கு வழிவகுக்கும். எனவே உட்புற காலணிகளை பயன்படுத்துவதன் மூலம் இந்த பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.

பாதுகாப்பு : வீட்டினுள் காலணிகளை அணிவதால், கூர்மையான பொருள்கள், சூடான மேற்பரப்புகள் மற்றும் வழுக்கும் பகுதிகளில் இருந்து பாதுகாப்பை வழங்குகிறது. இந்த எளிய முன்னெச்சரிக்கையானது வீட்டில் ஏற்படும் காயங்கள் மற்றும் விபத்துகளின் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும். நல்ல காலணிகள் பயன்படுத்துவதால், சமையலறை அல்லது குளியலறை போன்ற இடங்களில் நீர் கசிவுகள் அதிகமாக இருக்கும் இடங்களில் வழுக்கி கீழே விழுவதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

சுகாதாரம் : வீட்டினுள் பயன்படுத்த கூடிய Indoor footwear-கள் தரையுடன் நேரடி தொடர்பைக் குறைப்பதன் மூலம் நமது கால்களை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இது தொற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் நமது கால்களை அழுக்கு மற்றும் ஒவ்வாமைகளிலிருந்து பாதுகாக்கிறது. நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் ஆய்வின்படி, இன்டோர் காலணிகளைப் பயன்படுத்துவது அசுத்தமான மேற்பரப்புகளுடனான தொடர்பைக் குறைப்பதன் மூலம் கால் தொடர்பான நோய்த்தொற்றுகள் பரவுவதைத் தடுக்க உதவும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

சிறந்த ஆதரவு : உட்புற பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்பட்ட காலணிகளில் பெரும்பாலும் குஷனிங் மற்றும் ஆர்ச் சப்போர்ட் ஆகியவை அடங்கும். இது நம் கால்களில் அழுத்தத்தைத் தணிக்கும் மற்றும் நீண்ட நேரம் நிற்கும் போது அல்லது நடக்கும்போது வசதி உணர்வை அளிக்கும். போதுமான ஆதரவை வழங்கும் காலணிகள், நமது கால்கள் மற்றும் முதுகெலும்புகளின் இயற்கையான சீரமைப்பைப் பராமரிக்க உதவுவதால், முதுகுவலியின் அபாயத்தைக் குறைக்கிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்