பிரான்சில் இதுவரை 2800 பேர் 'டெங்கு காய்ச்சல்' நோயால் பாதிப்பு மேலும் அதிகரிக்கும். சுகாதாரத்துறை.
19 ஆனி 2024 புதன் 18:59 | பார்வைகள் : 3859
பிரான்சின் கடல் கடந்த மாகாணங்களை தவிர பிரதான நிலப்பரப்பிலேயே 2800 பேர் டெங்கு காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என பிரான்சின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2023ல் இதே காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டோரின் தொகை 2019தாக இருந்தது, இவ்வாண்டு இந்த தொகை அதிகரித்து இருப்பதாகவும் சுகாதாரத்துறை மேலும் தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு ஆரம்பித்ததில் இருந்து Guadeloupe, Martinique போன்ற பகுதிகளில் இருந்து பிரான்சின் பிரதான நிலப்பரப்புக்கு வருகை தந்தவர்களே இந்த நோயையும் கொண்டு வந்துள்ளார்கள் எனவும் சுகாதாரத்துறை மேலும் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஒலிம்பிக் காலகட்டங்களில் மிக அதிகமான மக்கள் பிரான்சின் பிரதான நிலப்பரப்பிற்கு வர இருப்பதால் இந்த நோய் தொற்றுகள் மேலும் அதிகரிக்கும் என்றும், எனவே அவதானமாக இருக்க வேண்டும் என்றும், சாதரத்துறை அறிவித்துள்ளது.