Paristamil Navigation Paristamil advert login

உலகின் முதல் AI மொடல் அழகுப் போட்டி - டாப் 10 பட்டியலில் இந்திய AI Zara

உலகின் முதல் AI மொடல் அழகுப் போட்டி - டாப் 10 பட்டியலில் இந்திய AI Zara

20 ஆனி 2024 வியாழன் 08:44 | பார்வைகள் : 1331


மிஸ் வேர்ல்ட், மிஸ் யுனிவர்ஸ் போன்ற அழகுப் போட்டிகளைப் போல, இப்போது உலகின் முதல் AI அழகுப் போட்டி நடைபெற உள்ளது.

Forbes அறிக்கையின்படி, AI மொடல்களுக்கு இடையேயான Miss AI போட்டியை பிரித்தானியாவின் Fanvue நிறுவனம் உலக AI கிரியேட்டர் விருதுகளுடன் (WAICA) இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

இரண்டு AI ஜடுவர்களைத் தவிர, PR ஆலோசகர் ஆண்ட்ரூ ப்ளாச் மற்றும் தொழிலதிபர் சாலி ஆன்-ஃபாசெட் ஆகியோரும் இப்போட்டியின் நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

போட்டியின் முதல் கட்டத்தில், 1500 பங்கேற்பாளர்களிடமிருந்து சிறந்த 10 AI மொடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாடல்களுக்கு பரிசு வழங்கப்படும்.

இப்போது Miss AI போட்டியின் டாப் 10 பட்டியலில் இந்தியாவின் AI மொடல் ஜரா ஷதாவரியும் (Zara Shatavari) சேர்க்கப்பட்டுள்ளது.

Zara Shatavari இந்திய மொபைல் விளம்பர ஏஜென்சியின் இணை நிறுவனர் ராகுல் சவுத்ரியால் உருவாக்கப்பட்டது.

சமூக ஊடகங்களில் Zara ஒரு health மற்றும் fitness influencer ஆவார். Zara உடல்நலம் மற்றும் ஃபேஷன் தொடர்பான குறிப்புகளை வழங்குகிறார்.

இன்ஸ்டாகிராமில் Zara-விற்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட Followers உள்ளனர். பெரும்பாலான படங்களில், ஜாரா யோகாவுடன் ஆரோக்கியமான உணவு தொடர்பான விடயங்களைச் சொல்கிறார்.

ஆசியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 2 மொடல்களில் ஜாராவும் ஒருவர்.

AI மொடலான ஜாரா ஜூன் 2023 முதல் PMH Biocare நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக உள்ளார்.

அதையடுத்து, ஆகஸ்ட் 2023-இல் DigiMojo e-Services LLP நிறுவனத்தில் Influencer Marketing Talent Manager-ஆக சேர்ந்துள்ளார். ஜாரா உ.பி., நொய்டாவில் வசிப்பவர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்