சிபிஐ விசாரணை கோரி அமித்ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்
20 ஆனி 2024 வியாழன் 16:44 | பார்வைகள் : 1643
கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியாகி உள்ள சம்பவம் குறித்து மத்தியஅரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது: தமிழகஅரசும் , காவல் துறையும் விசாரணை நடத்தினால் கள்ளச்சாராய விவகாரத்தில் உண்மை வெளிவராது. எனவே மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். கள்ளச்சாராய விவகாரத்தில் தமிழக அரசும் போலீசும் தான் பொறுப்பேற்க வேண்டும்.போலீசுக்கு தெரிந்தே பொதுமக்கள் புழங்கும் இடத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்து உள்ளது.கடந்தாண்டு மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் பலியாயினர். பள்ளி மற்றும் காவல்நிலையம் நீதிமன்றம் அருகிலேயே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திமுகவினர் துணையுடன் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.