Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் கடுமையான வெப்பம்   தொடர்பில்  விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடாவில் கடுமையான வெப்பம்   தொடர்பில்  விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

21 ஆனி 2024 வெள்ளி 08:41 | பார்வைகள் : 4973


கனடாவில் கடுமையான வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒன்றாரியொ மற்றும் கியூபெக் மாகாணங்களில் இவ்வாறு கடுமையான வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாகாணங்களிலும் கடுமையான வெப்பநிலை நிலவும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தின் மத்திய மற்றும் தென் பகுதிகளிலும் கியூபக்கின் தென்பகுதிகளிலும் கரையோர பிராந்தியங்களிலும் வெப்பநிலை 30 முதல் 35 பாகை செல்சியஸ் அளவில் காணப்படும். 

 ஈரப்பதனின் தன்மையில் ஏற்படும் மாற்றம் காரணமாக 40 பாகை செல்சியஸ் அளவிலான வெப்பத்தை உணர நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினமும் நாளையும் கடுமையான வெப்பநிலை நீடிக்கும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்